ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு குளிர்கால வானிலை பயண எச்சரிக்கை

Report Print Mohana in கனடா
178Shares

கனடா சுற்றுச்சூழல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு குளிர்கால வானிலை குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் பனிப்பொழிவு முன்னதாகவே எதிர்பார்க்கப்படுகின்றது.

வியாழக்கிழமை பிற்பகல் அளவில் ஒன்ராறியோவின் தென்பாகத்திற்கு குளிர்முகம் வந்தடையலாம் என வானிலை நிறுவனம் தெரிவிக்கின்றது. வெப்பநிலை சரிவடைதல் சாதுவான மழைச்சிதறல் ஏற்பட்டு பின்னர் பனிப்பொழிவாக மாறலாம்.

இதனால் தயார் படுத்தப்படாத பகுதிகளில் பனிக்கட்டி மற்றும் வழுக்கல் தன்மை ஏற்படலாம் என்றும் இதன்காரணமாக மாலை நேர வழக்கமான பயணம் பாதிக்கப்படலாம் எனவும் வானிலை நிறுவனம் கூறுகின்றது.

குளிர்கால பயண எச்சரிக்கைக்கு மேலதிகமாக பனிப்புயல் ரொறொன்ரோ பெரும்பாகம்- வடக்கு-பார்ரி, கொலிங்வூட் மற்றும் இன்னிஸ்வில உட்பட்ட-பகுதிகளில் ஏற்படலாம் எனவும் கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.

பல திடீர் பனிபுயல் ஏற்படும் பகுதிகளில் பனிப்பொழிவு 15-சென்ரி மீற்றர்களை தாண்டலாம் எனவும் காலநிலை ஏஜன்சி தெரிவிக்கின்றது.

பனிப்புயல் காரணமாக பார்வை தன்மையில் தெளிவற்ற நிலை காணப்படலாம். பலத்த பனிப்பொழிவும் பறக்கும் பனியும் கலந்து காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வியாழக்கிழமை உயர் வெப்பநிலை ரொறொன்ரோவில் 9 C. ஆனால் பிற்பகல் இறுதியில் 2 C ஆக வீழ்ச்சியடையும். இரவு வெப்பநிலை -9 C ஆக குறையும் எனவும் சுற்று சூழல் அறிவிப்பின் பிரகாரம் தெரியவருகின்றது.

குளிர்கால வானிலை பயண எச்சரிக்கை தென் ஒன்ராறியோவின் பெரும்பகுதி ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும் உட்பட்ட பகுதிகளை உள்ளடக்குகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்