சிகரெட் புகைத்துக்கொண்டு இதை செய்யலாமா?: பரிதாபமாக உயிரை விட்ட நபர்

Report Print Peterson Peterson in கனடா
354Shares
354Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் நபர் ஒருவர் சிகரெட் புகைத்தபோது நிகழ்ந்த வெடி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓண்டாரியோ நகருக்கு அருகில் உள்ள Oshawa என்ற பகுதியில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

நபருக்கு சுவாச பிரச்சனை இருப்பதால் சிறிய அளவிலான ஓக்ஸிசன் கருவி மூலம் செயற்கையான கருவி மூலம் அடிக்கடி சுவாசித்து வந்துள்ளார்.

அதே போல், நபருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் சிறிய சிலிண்டர் போன்ற அந்த சுவாசிக்கும் கருவியை வைத்துக்கொண்டு நபர் சிகரெட் புகைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத நேரத்தில் ஓக்ஸிசன் கருவி பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது.

இவ்விபத்தில் நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலும், வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் சிகரெட் பிடித்ததற்கான ஆதாரங்களை தடவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அஜாக்கிரதை காரணமாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்