களிமண் சிகிச்சையின் போது விபரீதம்: இளம் தாயார் உடல் வெந்து மரணம்

Report Print Arbin Arbin in கனடா
330Shares
330Shares
lankasrimarket.com

கனடாவின் கியூபெக் பகுதியில் சொகுசு ஸ்பா ஒன்றில் களிமண் சிகிச்சை எடுத்துக் கொண்ட இளம் தாயார் ஒருவர் உடல் வெந்து மரணமடைந்த வழக்கில் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது.

கியூபெக் பகுதியில் அமைந்துள்ள சொகுசு ஸ்பா ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இங்கு ஒரு குழந்தைக்கு தாயான Chantal Lavigne என்பவர் களிமண் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

குறித்த சிகிச்சையில் உடல் முழுவதும் களிமண் பூசிக்கொண்டு, அதன் மீது செல்லோபேன் சுற்றப்பட்டு, பெட்டி ஒன்றில் வைத்து 9 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படும்.

குறித்த சிகிச்சையின்போது அவருக்கு 40.5C அளவுக்கு வெப்ப நிலை இருக்கும்படி சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனிடையே சிகிச்சை துவங்கிய சில மணி நேரத்திலேயே குறித்த தாயார் உடல் வெந்து மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் குறித்த ஸ்பா நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டதில் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறையும் எஞ்சிய இருவருக்கு 2 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.

இதனிடையே ஸ்பா நிர்வாகிகள் மேற்கொண்ட மேல்முறையீடு இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, தண்டனை காலத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்