வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசித்த கனடிய பிரதமர்

Report Print Raju Raju in கனடா
108Shares
108Shares
lankasrimarket.com

கனடாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பேஸ்புக் சி.ஒ.ஓ-வுடன் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தியுள்ளார்.

உலக புகழ்பெற்ற சமூகவலைதளமான பேஸ்புக்கின் முதன்மைச் செயற்பாட்டு அலுவலராக (சிஓஓ) இருப்பவர் செரில் சாண்டுபெர்க் (48).

இவர் நேற்று கனடாவுக்கு வருகை தந்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேசினார்.

கனடாவில் வேலைவாய்ப்புகளை எப்படி அதிகளவில் உருவாக்குவது என இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், செரிலுடனான சந்திப்பு சிறப்பானதாக இருந்தது, கனடாவில் வேலைவாய்ப்புகளை புதுமையான முறையில் எப்படி உருவாக்க முடியும் என்பது குறித்து அவருடன் ஆலோசித்ததாக கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்