கனடாவில் Uber-ற்கு போட்டியாக பயணம்-பகிரும் Lyft ?

Report Print Mohana in கனடா
111Shares
111Shares
lankasrimarket.com

Uber-ன் மிகப்பெரிய போட்டியாளரான அமெரிக்காவின் பயணம்-பகிரும் நிறுவனம் Lyft தனது முதலாவது சர்வதேச விரிவாக்கத்தை ரொறொன்ரோவில் ஆரம்பிக்கின்றது.

ஊபர் ரொறொன்ரோவில் மிகப்பெரியதொரு போட்டியாளரை சந்திக்கும் என தோன்றுகின்றது. அமெரிக்காவின் பிரபல்யமான பயணம்-பகிரும் Lyft அங்கு நூற்றுக்கணக்கான நகரங்களில் செயல் படுகின்றது. சர்வதேச சந்தையில் இதன் முதலாவது இடம் ரொறொன்ரோவாகும்.

இந்த விரிவாக்கம் ஒரு புதிய மலிவான போக்குவரத்து தெரிவை ரொறொன்ரோ வாடிக்கையாளர்களிற்கு ஏற்படுத்தும் என நிறுவனம் தெரிவிக்கின்றது.

Lyft கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளதுடன் அதன் முதலாவது சர்வதேச நிறுவனத்தை ரொறொன்ரோவில் நிறுவுவது வழமைக்கு மாறானதாக அமையாதெனவும் கூறப்படுகின்றது.

வட அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குவது ரொறொன்ரோ. நகரத்தை சுற்றிவர ஒரு நம்பகமான மற்றும் மலிவான வழி வரும்போது பெரும்பாலான மக்கள் மாற்றீடு ஒன்றை நாடுவர் எனவும் கருதப்படுகின்றது.

இந்த வருட இறுதியில் ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் இச்சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது. சாரதிகள் ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பமாகின்றது.

கட்டண விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்