கனடாவில் டீக்கடை நடத்தி அசத்தி வரும் இளம் தம்பதி

Report Print Raju Raju in கனடா
680Shares
680Shares
lankasrimarket.com

கனடாவில் இளம் தம்பதி நடத்தி வரும் டீக்கடை மிகவும் பிரபலமடைந்துள்ளது.

ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரை சேர்ந்தவர் இயமான். இவர் மனைவி பெக்கா.

தம்பதி அவுஸ்திரேலியாவில் முன்னர் பணிபுரிந்த போது சிற்றுண்டி ஒன்றின் உரிமையாளரான ஜார்ஜ் என்பவரை சந்தித்துள்ளனர்.

மசாலா தேநீர் போடுவதில் பதினோரு ஆண்டு அனுபவம் கொண்ட ஜார்ஜிடம் இயமானும், பெக்காவும் அது குறித்து ஆர்வமாக கேட்டறிந்தனர்.

மசாலா தேநீரின் சுவை தம்பதிக்கு பிடித்து போக தாங்களும் அது போல ஒரு கடையை திறக்க முடிவெடுத்தனர்.

ஆசிய நாடுகளில் தேனீர் மிக பிரபலம் என்பதால் இருவரும் பல நாடுகளுக்கு சென்று பல்வேறு விதமான தேனீர் குறித்து கேட்டறிந்து அதை கற்றுகொண்டனர்.

பின்னர் தாய்நாட்டுக்கு திரும்பிய அவர்கள் Chaiwala Chai என்ற பெயரிலான தேனீர் கடையை திறந்துள்ளனர்.

கடையானது தேனீர் விரும்பிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்களது கடை குறித்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்வதை இயமானும், பெக்காவும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்