அப்பா வயது நபரை தீவிரமாக காதலிக்கும் இளம்பெண்: நேர்ந்த பிரச்சனை

Report Print Raju Raju in கனடா

அப்பா வயது நபரை இளம் பெண்ணொருவர் தீவிரமாக காதலித்து வரும் நிலையில் அவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் இன்னும் சம்மதிக்கவில்லை.

அமெரிக்காவின் ஒமஹ நகரை சேர்ந்தவர் மிச்செல்ல மேட்சன் (19). இவருக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த வில்லியன் மல்திரா (53) என்பவருடன் இணையம் மூலம் கடந்தாண்டு நட்பு ஏற்பட்டது.

வில்லியன் புகைப்படத்தை முதல் முறை பார்த்த உடனேயே அவர் மீது மேட்சனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் வீடியோ காலிங் மூலம் தங்கள் நட்பை அதிகமாக ஆக்க அது காதலாக மாறியுள்ளது.

காதலர்கள் போன் மற்றும் இணையம் மூலம் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வில்லியமை திருமணம் செய்ய இருப்பதாக மேட்சன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அப்பா வயது நபரை தங்களது மகள் திருமணம் செய்யவிருப்பதை மேட்சன் பெற்றோர் கடுமையாக எதிர்த்ததுடன் அவருடனான தொடர்பை துண்டிக்க வற்புறுத்தியுள்ளனர்.

மேலும், மேட்சனை மனநல மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளனர்.

ஆனாலும், வில்லியமை திருமணம் செய்தே ஆவேன் என பிடிவாதமாக இருந்த மேட்சன் அவரை காண கனடாவுக்கு சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.

தற்போது கனடாவில் காதலருடன் மேட்சன் வசித்து வருகிறார்.

ஆனாலும் பெற்றோரின் சம்மதத்துடன் தான் காதலரை கரம் பிடிப்பேன் என மேட்சன் பொறுமை காத்து வருகிறார்.

மேட்சன் கூறுகையில், எனக்கு முதல் முறை பார்க்கும் போதே வில்லியமை பிடித்துவிட்டது, அவர் மிகவும் நல்லவர்.

பெற்றோர் சம்மதத்துக்காக காத்துள்ளேன், அடுத்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் எங்கள் திருமணம் நடைபெறும் என நம்புகிறேன்.

எங்கள் இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ளதால் பலரும் எங்களை தந்தை - மகள் என நினைக்கிறார்கள்.

ஆனால் அதை பற்றி கவலைப்படாத நான், வில்லியம் என வருங்கால கணவர் என அப்படி நினைப்பவர்களிடம் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்