டிரினிடாட் தீவில் கொலை செய்யப்பட்ட கனடியர்

Report Print Kabilan in கனடா

கனடாவைச் சேர்ந்த ஒருவர், டிரினிடாட் தீவில் கொலை செய்யப்பட்டுள்ளதை ஒட்டாவா பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

கனடாவின் Ontario நகரில் இருந்து, டிரினிடாட் தீவுக்கு சுற்றுலா சென்ற கனடியர் ஒருவர் இறந்துள்ளதாக கனடா பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, கனடாவின் ஒட்டாவா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர், கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

மேலும், அவரின் உடல் Gravel சாலையில், கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் கிடைத்ததாகவும், அவரிடம் கொள்ளையடிக்க முயன்றபோது அவர் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்களை டிரினிடாட்டில் உள்ள செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனேடிய அதிகாரிகள் இந்த கொலையை உறுதி செய்துள்ளனர். மேலும், Ports of Spain-யில் உள்ள கனேடிய அதிகாரிகள், டிரினிடாட்டில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, துணை தூதரகத்தின் மூலமாக இறந்த நபரின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்