முதியவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர்: மக்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்

Report Print Kabilan in கனடா

கனடாவில் முதியவர் ஒருவரை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய இளைஞர் தோட்டா துளைத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஹாமில்டனின் Central lower city-யில் முதியவர் ஒருவரை, இரண்டு நபர்கள் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது Al-Hasnawi என்னும் இளைஞர், முதியவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், அந்த மர்ம நபர்கள் Al-hasnawi-யை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Yosif Al-Hasnawi என்னும் அந்த 19 வயது இளைஞரின் குடும்பம், கடந்த 2008ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து கனடாவிற்கு குடியேறியுள்ளனர். குடும்பத்தின் மூத்த பிள்ளை Hasnawi ஆவார்.

Al-Mustafa Islamic Centre-யில் மத விழா ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பியபோது தான் Al-Hasnawi-க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை இரவு, Al-Hasnawi-யின் இறுதிச்சடங்கில் பங்குயேற்ற மக்கள், மிகவும் உணர்ச்சி பொங்க தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

பலர், மலர்கொத்துகளை வைத்து அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்கள் ’Al-Hasnawi தங்களின் கதாநாயகன்’ எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்னொரு நபரை தேடி வருகின்றனர்.

தடகள வீரரான Yosif Al-Hasnawi, குத்துச்சண்டை மற்றும் கூடைபந்தாட்டத்திலும் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்