சாலையில் கிடந்த 1500 டொலர்! நபர் செய்த காரியம்

Report Print Kabilan in கனடா

சாலையில் கிடைத்த 1500 டொலர் இருந்த அட்டைப்பெட்டியை, நபர் ஒருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கனடாவில் Metro Vancouver Domino's Pizza கடையின் உரிமையாளர் Gary Josefczyk. இவர் தனது உணவகங்களில் கிடைக்கும் நன்கொடை பணத்தினை, B.C-யின் குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த நன்கொடை பணத்தினை ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் வைத்து, தன் காரின் மேற்கூரையில் கட்டிவைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் அந்த அட்டைப்பெட்டி தவறி விழுந்துள்ளது.

பணப்பெட்டியை அவர் தவறிவிட்டதை உணர்ந்த அவர், உடனே பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், Shane Griffin என்பவர் 1,500 டொலர் பணம் இருந்த அட்டைப்பெட்டியை சாலையில் கண்டெடுத்ததாக, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

முதலில் ஏதோ குப்பைப் பெட்டிதான் கிடக்கிறது என்று நினைத்த அவர், அதனைத் திறந்து பார்த்தபோது பணம் இருந்ததை அறிந்துள்ளார். உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார்.

இது குறித்து Griffin கூறுகையில், ‘இதனை நான் சாதாரணமாக தான் செய்தேன். அந்த பணத்தை நான் எடுத்துக் கொண்டு சென்றிருந்தால் என்னால் இரவில் தூங்கியிருக்க முடியாது.

பணத்தை ஒப்படைத்த பின்னர், பீட்ஸா கடை உரிமையாளரை சந்திக்க சென்றேன். ஆனால், கடையின் மேனேஜர் என்னை தடுத்தார். எனினும், இரண்டு பீட்ஸாக்களை இலவசமாக அவர்கள் அளிப்பதாக கூறினர்.

ஆனால், அதற்கு நான் பணம் செலுத்திவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து Gary Josefczyk கூறுகையில், ‘எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகத்தில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் மூலமாக தெரிந்து கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...