ஆபாச திரைப்பட நடிகை மர்ம மரணம்

Report Print Raju Raju in கனடா

ஆபாச திரைப்பட நடிகை மரணமடைந்துள்ள நிலையில் அது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கனடாவை சேர்ந்தவர் ஆகஸ்ட் அமிஸ் (23), ஆபாச திரைப்பட நடிகையான இவர் நேற்று கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார்.

அமிஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

அதே நேரத்தில் சந்தேகபடும்படியான எந்த தடயமும் இல்லை என அமிஸ் இறப்பு குறித்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமிஸின் கணவர் கூறுகையில், அவளை போல அன்பானவரை நான் சந்தித்தது இல்லை. என் உலகமாக அவள் இருந்தாள்.

இது எங்களது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை என்பதால் தயவுசெய்து விட்டு விடுங்கள் என கூறியுள்ளார்.

அமிஸ் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தான் தற்கொலை செய்து கொள்வேன் என பயந்ததாகவும் அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.

அமிஸின் மறைவுக்கு அவர் சார்ந்திருக்கும் துறையினர் பலர் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்