தீயில் கருகிய 3 வயது சிறுவன்:ஒன்றாரியோவில் துயர சம்பவம்

Report Print Deepthi Deepthi in கனடா

கலிடோனியா, ஒன்ராறியோ--கலிடோனியாவிற்கு அருகாமையில் ஆறு நாடுகளின் பிரதேசத்தில் இடம்பெற்ற தீயில் மூன்று வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

வெள்ளிக்கிழமை பகல் விடொன்றில் தீ பிடித்ததாக தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகளிடம் வீட்டிற்குள் சிறுவர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

புகை சூழ்ந்திருந்த விட்டிற்குள் பொலிசார் நுழைந்து சிறுவன் ஒருவனை வெளியே எடுத்தனர் ஆனால் சிறுவன் வைத்தியசாலையில் இறந்து விட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. குறிப்பிட்ட வீட்டில் ஆறு பிள்ளைகள் உட்பட ஒன்பது பேர்கள் வசித்ததாக கூறப்படுகின்றது.

மற்றய இரு பிள்ளைகள் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...