கனடாவை சூழ்ந்த பனிப்பொழிவு

Report Print Harishan in கனடா

கனடாவின் டொராண்டோ நகரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து எச்சரித்து அறிக்கை விடுத்துள்ள கனடாவின் வானிலை தகவல் மையம் 15 முதல் 20 செ.மீ வரை பனிப்பொழிவு இருக்கக்கூடும் என கூறியுள்ளது.

டொரண்டோ மகாணத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் மற்றும் குறிப்பாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலை மாறுவதற்கு மேலும் 24 மணி நேரம் ஆகக்கூடும் என்பதால் விமானங்களை முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவரும் தங்கள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன் ஒரு முறை அவர்களின் விமானசேவை இணையதள பக்கத்திற்கு சென்று சோதனை செய்யும்படி விமான நிலையம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான பனிப்பொழிவால் டொரண்டோ நகர் முழுவதும் வெள்ளை போர்வை படர்ந்துள்ளது போல் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்