கனடிய அரசாங்கத்தின் பதிலடி

Report Print Deepthi Deepthi in கனடா

வெனிசுலா நாட்டு தூதரக அதிகாரிகள் அனைவரையும் கனடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

வெனிசுலாவில் சில மாதங்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையை கலைத்து விட்டு புதிதாக அரசியல் சாசன சபையை அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமைத்தார்.

முழுக்க முழுக்க ஆளும் கட்சியே இந்த சபையில் பங்கு வகிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனால், ஏற்பட்ட கலவரத்தில் 120-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கு கனடிய அரசாஙகம் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், கனடாவில் உள்ள வெனிசுலா தூதரக அதிகாரிகள் மனித உரிமைகளை மீறியதாக கூறி அவர்களுக்கு சில தடைகளை விதித்தது.

இதனால் கோபம் கொண்ட வெனிசுலா அரசாங்கம், கனடா தூதர் க்ரைப் கோவாலிக் மற்றும் பிரேசில் தூதர் ரை பெரைரா ஆகிய இருவரும் வெனிசுலாவின் சட்ட திட்டங்களை ஒழுங்காக கடைபிடிக்கவில்லை என்று கூறி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் வெனிசுலாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு தூதர் வில்மர் பார்ரியெண்டோஸ் பெர்னாண்டஸ் மற்றும் தூதரக அதிகாரி ஏஞ்சல் ஹெர்ரேரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற கனடா உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவில் ஜனநாயக விரோத அரசு நடைபெற்றுவருவதாகவும், பிராந்திய நட்பு நாடுகளின் துணையுடன் அதை எதிர்ப்பதற்கான அழுத்தத்தை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்று கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers