புத்தாண்டு முதல் மொன்றியலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

Report Print Fathima Fathima in கனடா
94Shares
94Shares
ibctamil.com

கனடாவின் மொன்றியலில் நேற்று முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில் அதனால் தீங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பல நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கனடாவின் பெரிய நகரமான மொன்றியலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, நேற்று முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது.

இது 50 மைக்ரான் குறைவான தடிமன் மற்றும் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும் பொருந்தும்.

எனினும் மளிகை கடைகளில் பழம் மற்றும் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பைகளுக்கும், இறைச்சியை மூட பயன்படுத்தப்படும் பைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழலுக்கான நகரக்குழு உறுப்பினர் Jean-Francois Parenteau கூறுகையில், ஆண்டுதோறும் சுமார் 2 பில்லியன் பைகள் பயன்படுத்துகிறோம், ஆனால் 14 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று முதல் தடை அமுல்படுத்தப்பட்டாலும், வணிகர்களுக்கு ஆறு மாத காலம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 5 க்குப் பின்னர் தடையை மீறினால், ஒரு தனிநபருக்கு $ 1,000 டொலரும், நிறுவனத்திற்கு $ 2,000 டொலர் வரையும் அபராதம் விதிக்க முடியும்.

இதேபோன்று விக்டோரியா மாகாணத்திலும் 2018 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

எனினும் இத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடிய பிளாஸ்டிக் தொழில் சங்கத்தின் வலைத்தளத்தில், பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்