20 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண்: பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு

Report Print Raju Raju in கனடா
201Shares
201Shares
ibctamil.com

கனடாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில் கொலையாளி குறித்த தகவலை தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் மீண்டும் அறிவித்துள்ளனர்.

நாட்டின் டொரண்டோவில் உள்ள டிரிப்ட்வுட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு யூலை 29-ஆம் திகதி கிரேஸ்லின் கிரினீட்ஜ் (41) என்ற பெண் மர்ம நபரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கிரினீட்ஜுடன் பணிபுரிந்த நபர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் ரத்த வெள்ளத்தில் கிர்னீட்ஜ் கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆகியும் கொலையாளியை பொலிசார் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த 1999-ஆம் ஆண்டு கொலையாளி பற்றி தகவல் தருபவர்களுக்கு $100,000 சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொலையாளியின் டி.என்.ஏ-வை பொலிசார் தற்போது கண்டுப்பிடித்துள்ள நிலையில் அதை வைத்து அவனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஸ்டாஸி கேலண்ட் கூறுகையில், கொலையாளிக்கு சம்பவம் நடக்கும் போது வயது 30-களில் இருந்தது, 165 பவுண்ட் எடையுடன் 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்டுள்ளான் என அப்போதே அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

தற்போது டி.என்.ஏ கிடைத்திருப்பதன் மூலம் மீண்டும் விசாரணையை முழு மூச்சில் தொடங்கியுள்ளோம்.

கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு $50,000 சன்மானம் வழங்கப்படும். எப்படியாவது இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்