தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீட்கப்பட்ட கனடியர் மீது பாலியல் வழக்கு

Report Print Raju Raju in கனடா
330Shares
330Shares
ibctamil.com

தலிபானுக்கு தொடர்புடைய கிளர்ச்சி குழுவால் பணயக்கைதியாக வைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட கனடியர் மீது 15 குற்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த ஜோசுவா பாய்லி (34), அவரது மனைவி கெயிட்லான் கோல்மென் என்பவரும் கடந்த 2012-ஆம் ஆண்டு தலிபானுக்கு தொடர்புடைய கிளர்ச்சி குழுவால் பணயக்கைதிகளாக ஆப்கானிஸ்தானில் வைக்கப்பட்டனர்.

இவர்களின் பிள்ளைகளும் உடன் சிறை வைக்கப்பட்டனர், கடந்த அக்டோபரில் பாய்லி குடும்பத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டார்கள்.

விடுதலையான பின்னர் பாய்லி அளித்த பேட்டியில், தன்னுடைய ஒரு குழந்தையை கிளர்ச்சியாளர்கள் கொன்றதுடன், மனைவியை பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் பாய்லி மீது பாலியல் தாக்குதல், கொலை மிரட்டல், பொலிசாரை தவறாக வழிநடத்தியது உட்பட மொத்தமாக 15 குற்றபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாய்லியின் வழக்கறிஞர் கூறுகையில், பாய்லி ஒரு அப்பாவி, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை, குற்றச்சாட்டுகளிலிருந்து பாய்லியை பாதுகாப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்