கனடாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தந்தை கைது

Report Print Raju Raju in கனடா
201Shares
201Shares
ibctamil.com

கனடாவில் இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தின் ஓக் பே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 25-ஆம் திகதி Chloe (6) மற்றும் Aubrey (4) ஆகிய இரண்டு சகோதரிகள் பொலிசாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அங்கு ஆண் ஒருவர் காயத்துடன் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது காயமடைந்த நபரின் பெயர் ஆண்ட்ரூ ராபர்ட் (43) எனவும் அவர் இரண்டு சகோதரிகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ரூ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் இருவரையும் கொலை செய்ததாக அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் ஆண்ட்ரூவிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வேறு தகவலை தர பொலிசார் மறுத்துவிட்டனர்.

ஆண்ட்ரூவும் அவர் மனைவி சாரா காட்டனும் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிந்துவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவு படி Chloe (6) மற்றும் Aubrey ஆகிய இருவரும் சிறிது காலம் தாய் மற்றும் சிறிது காலம் தந்தையுடன் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்