168 பயணிகளுடன் மோதிய விமானம்: உள்ளே இருந்த பயணி எடுத்த வீடியோ வெளியானது

Report Print Santhan in கனடா
919Shares
919Shares
ibctamil.com

கனடாவில் பயணிகள் விமானம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கனடாவின் டோரண்டோ நகரின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்றுக் கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியுள்ளது.

இந்த மோதலினால் விமானத்தின் இறகுப் பகுதியில் தீ பிடித்தது. உடனடியாக விரைந்து வந்த டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் விமானத்திலிருந்து 168 பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

விமான நிலையம் சார்பில், விமானத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் குறித்த விமானத்தின் மீது மோதியது தொடர்பான வீடியோவை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் மோதிய வேகத்தில் விமானத்தின் இறகுப் பகுதி தீ பிடிக்கிறது. இதைக் ஜன்னல் வழியே கண்ட பயணிகள் உயிருக்கு பயந்து அலறி கத்துவது அதில் உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்