மாறி மாறி கட்டியணைத்துக்கொண்ட குழந்தைகள்: கடல் கடந்து கவனம் ஈர்த்த காட்சி

Report Print Deepthi Deepthi in கனடா
607Shares
607Shares
ibctamil.com

அல்பேர்ட்டா மாகாணத்தில் நான்கு குழந்தை ஒருவரையொருவர் அன்பாக கட்டியணைத்துக்கொள்ளும் வீடியோ கடல் கடந்தும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் கவர்ந்துள்ளது.

Emily, McKayla, Abigail மற்றும் Grace Webb ஆகிய நான்கு பேரும் ஒரு பிரசவத்தில் Bethani Webb என்ற பெண்மணிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிறந்துள்ளனர்.

தற்போது, இவர்களுக்கு 20 மாதங்கள் ஆகியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் மாறி மாறி ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சியை இவர்களது தாய் வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ இதுவரை 45 million views வந்துள்ளது, குறிப்பாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் பார்த்து, தங்களது அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தாய் கூறியுள்ளதாவது, இந்த வீடியோ இவ்வளவு பேரால் கவனம் ஈர்க்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்வதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்