குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்த தந்தை

Report Print Balamanuvelan in கனடா
377Shares
377Shares
ibctamil.com

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் 50 வயதான Steve Macdonald பரிதாபமாக பலியானார்.

கனடாவின் ஒன்றோரியாவில் உள்ள Oshawa உள்ள குடியிருப்பில் செவ்வாய்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது, இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் மூன்று பேரை மீட்ட Steve Macdonald என்பவரும் ஆவர்.

இரண்டு தளங்கள் கொண்ட அந்த வீட்டில் இருந்த தனது குடும்பத்தினரில் சிலரைக் காப்பாற்றிய Steve Macdonald, மீதமுள்ளவர்களையும் காப்பாற்றுவதற்காக உள்ளே சென்றவர் வெளியே வரவே இல்லை.

Steve Macdonaldஇன் மகளான Alyshaவைத் திருமணம் செய்யவிருக்கும் Desroches கூறும்போது, நாங்கள் ஒரு உண்மையான ஹீரோவை இழந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

Ontario தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.

"தீ எங்கு ஆரம்பித்தது என்பதைக் கண்டறிந்தபின்தான் எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான காரணங்களை ஆராயமுடியும்” என்று தெரிவித்துள்ள Ontario Fire Marshal, Richard Derstroff எரிந்துபோன பொருட்களுக்கிடையே தேடவேண்டியுள்ளதால் அதற்கு சற்று கால தாமதம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்