அந்த செய்தியை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்: கனடியரின் திக் திக் நிமிடங்கள்

Report Print Fathima Fathima in கனடா
244Shares
244Shares
lankasrimarket.com

ஹவாயை ஏவுகணை தாக்கப் போகிறது என்ற செய்தி பரவியதும் அதிர்ந்து போய் விட்டதாக கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8.10 மணியளவில் மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று பரபரப்பட்டது.

அதில், பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கியுள்ளது, அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் இது பொய்யான தகவல் என தெரியவந்தது.

இந்நிலையில் தங்களது செல்போனில் குறுஞ்செய்தி வரவே, அப்படியே அதிர்ந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளனர் கனடியர்கள்.

Stephanie Patel என்பவர் கூறுகையில், அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, எந்த மாதிரியான எச்சரிக்கை தகவல் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.

உடனடியாக தன்னுடைய தாய்க்கு போன் செய்து அழுததாகவும், பிரார்த்தனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்கள் கழித்த பின்னரே பொய்யான தகவல் என தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் நடைபெறும் முன்பு வரை நான் இப்படி பயந்துபோவேன் என எனக்கே தெரியாது, தாய்வீட்டுக்கு செல்ல இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்