4 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கைது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தன்னிடம் பயிற்சி பெறும் 15 வயது சிறுமியிடம் நான்கு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டொரண்டோவை சேர்ந்தவர் ஸ்காட் மெக்பேர்லேன் (28), இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக உள்ளார்.

இந்நிலையில் தன்னிடம் பயிற்சி பெறும் 15 வயது சிறுமிக்கு ஸ்காட் 4 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார்.

இந்த விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் பொலிசார் ஸ்காட்டை கைது செய்துள்ளனர்.

அவர் மீது பாலியல் துன்புறுத்தல், 16 வயதிற்கு உட்பட்ட நபர் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்-டால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

வருங்காலத்தில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராக செயல்பட ஸ்காட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers