வித்தியாசமாக நடத்தப்பட்ட அழகிப்போட்டி: கனடாவில் சுவாரஸ்யம்

Report Print Harishan in கனடா
168Shares
168Shares
lankasrimarket.com

கனடாவில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற அழகிப்போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'Mrs.Canada Globe 2018' எனப்படும் கனடா நாட்டின் அழகிப்போட்டி நேற்று நடைபெற்றது.

அப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற 10 அழகிகளில் பட்டம் வெல்லப்போவது யார் என்ற கேள்வியோடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த போட்டியை தலைமையேற்று நடத்திய கிம்பர்லி கேஸ்டில், வித்தியாசமான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, போட்டியாளர்களின் வெளிப்புற தோற்றத்தை விட உள் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு போட்டியாளரும் குறைந்தது ஒரு நிமிட அளவிற்கு மேடையில் பேசிட வேண்டும்.

ஏனெனில், நடுவர்கள் குழுவில் பார்வை குறைபாடுடைய அஷ்லி நெமத் என்ற பெண்ணும் இருந்ததால் இந்த அறிவிப்பு என கூறப்பட்டது.

முதலில் போட்டியாளர்களின் அழகு குறித்து நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு நிமிட அளவிற்கு மேடையில் பேசினர்.

இறுதியாக பேசிய நெமத் கூறுகையில், பார்வை குறைபாடு உடைய என்னை நடுவராக அழைத்த போது முதலில் எனக்கு நடுக்கம் தான் வந்தது, இது வெற்றி பெறும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

சாதனை புரிவதற்கு பார்வை குறைபாடு ஒரு தடையாக இருக்காது என்பதை உணர்த்தவே இந்த முயற்சியில் இறங்கியதாக கிம்பர்லி கேஸ்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்போட்டியின் பட்டத்தை Urszula Urac என்னும் பெண் தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்