இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடா பிரதமர்

Report Print Kabilan in கனடா
120Shares
120Shares
lankasrimarket.com

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்ல இருக்கிறார்.

பிப்ரவரி 17ஆம் திகதி, இந்தியா செல்லும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

அதன்படி, பிப்ரவரி 19ஆம் திகதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துக்குச் (IIM) செல்கிறார். அங்கு மேலாண்மைக் கல்வி பயின்றுவரும் மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து, முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி, வணிகம், மருத்துவம் போன்ற விவரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 23ஆம் திகதி கனடா செல்கிறார். முன்னதாக, அகமதாபாத் IIM மாணவர்களிடையே உரையாற்ற உள்ள முதல் வெளிநாட்டு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்