ஈரானில் கைது செய்யப்பட்ட கனேடிய பேராசிரியர் உயிரிழப்பு

Report Print Kavitha in கனடா
85Shares
85Shares
lankasrimarket.com

உளவு பார்த்ததாக ஈரானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கவஸ் சைய்ட் எமாமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கவஸ் சைய்ட் எமாமி இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பேராசிரியாராகவும் ஈரானில் உள்ள வனவிலங்குகள் பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.

இவர் கடந்த 14 ஆம் திகதி கவஸ் சைய்ட் எமாமி உயரிழந்த தகவல் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதாக கவஸ் சைய்ட் எமாமியின் மகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக ஈரானிய அதிகாரிகளால் குறிப்பிடப்படுகின்ற போதிலும், அதனை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் இவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்