ஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி!

Report Print Dias Dias in கனடா
317Shares
317Shares
lankasrimarket.com

கனடாவின் - ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோ முற்போக்கு பழமைவாத கட்சிக்கான தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகள் கரலைன் மல்ரூனி தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு, நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில், அவரின் தந்தையின் தமிழ் மக்களுக்கான செய்தி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 11ஆம் திகதி 1986 ஆம் ஆண்டு 155தமிழ் அகதிகள் கப்பல் மூலம் கனடாவின் நியூபின்லாந்து கடற்கரையை சென்றடைந்துள்ளன.

அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தபோது கனடா குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளால் கட்டியெழுப்பப்பட்ட தேசம் என உறுதியாக நின்று அவர்களை இருகரம் நீட்டி அழைத்து ஈழத்தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலையில் இருந்து தப்பி கனடாவிற்கு பெருமளவில் வருவதற்கான கதவை அகலத்திறந்து விட்டவர் கனடாவின் 18வது பிரதமர் பிரைன் மல்ரூனி.

அன்றைய சூழலில் அது மிகுந்த துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாக இன்றும் பார்க்கப்படுகிறது. அவர் விடுத்த செய்தியில் இங்கு வந்த தமிழ் மக்கள் கனடிய தேசத்தின்.

கட்டுமானத்திலும் ஏனைய சமூகங்களுடன் இணைந்த வாழ்க்கையிலும் அதி சிறப்பாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டு அதற்காக தனது மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஒன்று கூடல் கனடிய தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்