மூன்று நாட்களுக்கு முன் மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு: நடந்தது என்ன?

Report Print Harishan in கனடா
777Shares
777Shares
lankasrimarket.com

கனடாவில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 14-வயது பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் லாவல்(Laval) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்த Athena Gervais என்னும் 14 வயது மாணவி கடந்த திங்களன்று பிற்பகல் மாயமாகியுள்ளார்.

சரியாக மதிய உணவிற்கு பின் மாணவியை யாரும் பார்த்திடாத நிலையில் மாணவி மாயமானது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Credit:Laval police

இந்நிலையில் பொலிசார் கடந்த மூன்று நாட்களாக மோப்ப நாய், மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடிவந்த நிலையில் மாணவி பயின்று வந்த பள்ளிக்கு பின்னால் இருக்கும் நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவியின் இந்த மர்ம மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் வெளியாகும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவி தன் வீட்டில் மிக மகிழ்ச்சியாக இருந்துள்ளதால் இது நிச்சயம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Credit:Benoit Ducharme/Radio-Canada

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்