உள்நாட்டிலே குறைந்துள்ள கனடா பிரதமரின் செல்வாக்கு: காரணம் என்ன

Report Print Kabilan in கனடா
815Shares
815Shares
lankasrimarket.com

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு உள்நாட்டில் குறைந்துள்ளதற்கு, இந்திய சுற்றுப்பயணமே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் டெல்லி வந்து இறங்கியபோது, இந்திய அரசின் சார்பில் வெளியுறவு அதிகாரிகள் மட்டுமே நேரில் சென்று வரவேற்றனர்.

இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் இரவு விருந்து அளித்தார். பல்வேறு பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர். அத்துடன், காலிஸ்தான் பிரிவினை பேசும் சீக்கியர் ஒருவருக்கும், இந்த விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கவே, அந்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டது. இவ்வாறாக, ஜஸ்டினின் இந்தியப் பயணம் பல சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில், Ipsos என்ற நிறுவனம் கனடாவில் தேர்தல் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்கு அளிக்கப்படும் என்று கேட்கப்பட்டிருந்தது.

இதில், ட்ரூடோவின் லிபெரல் கட்சியை விட, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதற்கு காரணம், ஜஸ்டினின் இந்தியப் பயணமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜஸ்டினின் இந்தியப் பயணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக 40 சதவிதம் மக்களும், நேர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளதாக 16 சதவிதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும், 54 சதவிதம் பேர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு, கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 1ஆம் திகதி வரை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்