இந்த போட்டோ சரியில்லை: மணப்பெண்ணுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

Report Print Kabilan in கனடா
262Shares
262Shares
lankasrimarket.com

கனடாவில் திருமண புகைப்படக்காரர் குறித்து அவதூறாக பேசிய பெண்ணிற்கு, அந்நாட்டு நீதிமன்றம் $115,000 அபராதமாக விதித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்தவர் எமிலி லியாவ், கடந்த 2015ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக, தனது திருமணத்திற்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்த தர வேண்டி, ஒரு புகைப்பட நிறுவனத்தினை எமிலி அணுகியுள்ளார்.

எமிலியின் திருமணத்திற்கு சென்ற அந்நிறுவனத்தினர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.

ஆனால், எமிலி அந்நிறுவனத்திற்கு அளித்த முன்பணம் தவிர, ஏனைய தொகையை புகைப்படங்கள் சரியில்லை மற்றும் தனக்கு அதில் திருப்தி இல்லை என்று கூறி கொடுக்க மறுத்துவிட்டார்.

மேலும், புகைப்பட நிறுவனம் பணம் கேட்டு அழுத்தம் தந்த போது, அந்நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியுள்ளார், இதனால் அந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து எமிலி மீது அந்நிறுவனம் வழக்கு தொடரவே, புகைப்படங்கள் மகிழ்ச்சி அளிக்காததற்கான காரணத்தை நிரூபிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

எமிலி அதனை நிரூபிக்க தவறிவிட்டார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் புகைப்படக்காரர் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக, எமிலிக்கு $115,000 அபராதத்தினை நீதிமன்றம் விதித்துள்ளது.

THE CANADIAN PRESS/HO-Kitty Chan

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்