உலகிற்கே எடுத்துக்காட்டான கனடா மருத்துவர்கள்: நெகிழ்ச்சி காரணம்

Report Print Kabilan in கனடா
320Shares
320Shares
lankasrimarket.com

கனடாவில் தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான வருமானம் பெறுவதால், ஊதிய உயர்வு தேவையில்லை என அந்நாட்டின் அரசு மருத்துவர்கள், மருத்துவ கவுன்சிலிடம் மனு அளித்துள்ளனர்.

கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கியூபெக் நகரில், அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஊதிய உயர்வை அரசு மருத்துவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவச் சங்கத்தின் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு, அரசு மருத்துவர்கள் சார்பில் பதிலளிக்கும் வகையில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், ‘மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

மேலும் செவிலியர்களின் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. அதனால் அவர்கள் பணிச்சுமை காரணமாக, மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

எங்களது சக ஊழியர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் போது, நாங்கள் எவ்வாறு இந்த ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் எங்களுக்கு இந்த ஊதிய உயர்வு தேவையில்லை’என தெரிவித்துள்ளனர்.

MATHIEU BELANGER

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்