மருத்துவமனை அலட்சியம்: குழந்தை பெற்ற 3 நாளில் இறந்த இளம்தாய்

Report Print Raju Raju in கனடா
634Shares
634Shares
lankasrimarket.com

கனடாவில் குழந்தை பெற்ற மூன்று நாட்களில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒன்றாறியோவை சேர்ந்தவர் ரியாஸ், இவர் மனைவி ஆயிஷா (24).

ஆயிஷா முதல் முறையாக கர்ப்பமான நிலையில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து ஆயிஷாவுக்கு அழகான குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடல் சூடாக ஆரம்பித்ததுடன், உடல் எலும்புகளும் வலிக்க தொடங்கியுள்ளது.

Credit: Go Fund Me

இது குறித்து ரியாஸ் செவிலியர்களிடம் சொன்ன போது குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட வலி தான் எல்லாம் காலையில் சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.

ஆனால் ஆயிஷாவுக்கு தொடர்ந்து உடல்நிலை மோசமாக தொடங்கியதோடு, மூச்சு விடவும் சிரமப்பட்டு தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மருத்துவரிடம் கூறிய நிலையில் செயற்கை சுவாசம் வைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதை உடனடியாக செய்யாத மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தியுள்ளது.

பின்னர் குழந்தை பெற்ற இரண்டாவது நாளில் ஆயிஷாவுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட போதும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

Credit: Go Fund Me

இதையடுத்து அடுத்த நாள் ஆயிஷா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையில் ரியாஸ்டிடம் வந்த மருத்துவர்கள் Group A streptococcus என்னும் நோய் ஆயிஷாவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நேரத்தில் திடீரென ஆயிஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை பார்த்தும் பலனில்லாமல் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த மருத்துவமனையின் அலட்சியமே ஆயிஷா இறப்புக்கு காரணம் என ரியாஸ் மற்றும் அவர் குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதோடு மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நிதி வசூலித்து வருகிறார்கள்.

மொத்தமாக இந்த விடயத்துக்கு $100,000-க்கும் அதிகமாக பணம் தேவைப்படும் என்ற நிலையில், முதற்கட்டமாக $25,000 பணத்தை நிதியாக திரட்ட ரியாஸ் குடும்பத்தார் உறுதிபூண்டுள்ளனர்.

Credit: Go Fund Me

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்