மயங்கி சரிந்த பொலிசார்: கனடா பிரதமர் பங்கேற்ற விழாவில் சம்பவம்

Report Print Balamanuvelan in கனடா
909Shares
909Shares
lankasrimarket.com

கனடாவின் முதல் பெண் கமிஷனரை பிரதமர் அறிமுகம் செய்து வைக்கும் விழா இருமுறை தடைபட்டது.

வைரலாகும் இன்னொரு வீடியோவில் பிரதமருக்கு பின்னால் நிற்கும் Royal Canadian Mounted Police பிரிவைச் சேர்ந்த இரண்டு பெண் பொலிசார் மயங்கிச் சரியும் காட்சி வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் வெகு நேரம் 45 நிமிடம் தொடர்ந்து நின்றதால் மயங்கி விழும் அவர்களைக் கண்டு பரிதாபம் ஏற்பட்டாலும், அந்த வீடியோவைப் பார்க்கும்போது அவர்கள் இருவரும் குழந்தைகளின் கார்ட்டூன் படங்களில் வருவதைப் போல மயங்கி சரிகின்றனர்.

உரையாற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இப்பொது நான் நன்கு பணி புரிந்த நமது உறுப்பினர்கள் இருவரை பார்க்கச் செல்கிறேன்” என்று கூறி பேச்சை முடித்தார்.

அவரும் புதிதாக பொறுப்பேற்ற பெண் கமிஷனரும் மயங்கி விழுந்த பெண் பொலிசாரைக் காணச் சென்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்