பழங்குடியினருக்கு பெருமை சேர்த்த பெண்கள்

Report Print Kabilan in கனடா
98Shares
98Shares
lankasrimarket.com

கனடாவில் இரண்டு பழங்குடி இன பெண்கள், முதல் முறையாக வான் ஆம்புலன்ஸ் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் மனிரோபா மாகாணத்தின், பெண் விமானிகளாக ரொபின் சிலாசெக்ரா மற்றும் ரவென் பேர்டி ஆகிய பழங்குடியின பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Captain ஆக உள்ள ரொபினும், முதல் நிலை அதிகாரியாக இருக்கும் ரவென் பேர்டி ஆகிய இருவரும் மிசிநிப்பி எயர்வேயில், வான் ஆம்புலன்ஸ் விமானிகளாக இணைந்துள்ளனர்.

இதன் மூலம், பழங்குடி இனத்தில் இருந்து மனிரோபா மாகாணத்தின் முதலாவது பெண் அணியினராக, விமானி பணியில் சேர்ந்துள்ள பெண்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

இது குறித்து இருவரும் கூறுகையில், ‘எங்களின் சாதனைகளும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டில் விமான பணியில், ஒரு டஜனுக்கும் குறைவான பழங்குடி பெண்களே விமான பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்