கனடாவிலிருந்து மனைவியுடன் யாழ். வந்த நபர் சடலமாக மீட்பு

Report Print Theesan in கனடா
510Shares
510Shares
lankasrimarket.com

வவுனியா - கோவில்குளம் பகுதியில்கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து அயலவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாழில் உள்ள கோவிலின் உற்சவத்திற்கு தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதன்போது, வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், மகன் மற்றும் மருமகள் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையில் குறித்த நபர் மாத்திரம் தனிமையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்