டொனால்ட் டிரம்ப்பை பாராட்டிய கனடா பிரதமர்

Report Print Athavan in கனடா
124Shares
124Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதையும் ஒளிவு மறைவு இன்றி நேருக்கு நேர் பேசக்கூடியவர் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி நிறுவனம் அழைத்திருந்தது.

அப்போது டிரம்ப் குறித்து பேசிய ஜஸ்டின், எப்போதும் அவரது பேச்சுகளில் உறுதியாக இருப்பார், எனவே அவர் தெரிவித்தது போல் அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை அவர் கட்டுப்படுத்துவர் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.

அவர் எப்போதும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார், நாங்கள் சில விஷயங்களை ஒப்புக் கொண்டால் அவர் அதை செயல்படுத்த தொடங்கிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிரம்ப் எதையும் ஒளிவு மறைவு இன்றி நேருக்கு நேர் பேசக்கூடியவர் என்று கூறிய ஜஸ்டின், அதற்கு ஒரு உதாரணமாக கனடாவிடம் அமெரிக்கா சமீபத்தில் முன்வைத்த ஸ்டீல் கட்டணத்தை சுட்டிக்காட்டினார்.

கனடாவை விட வேறு ஒரு நாடு அமெரிக்காவுக்கு சிறந்த நட்பு நாடாக இல்லை என மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்