என் வாழ்வை மாற்றிய ஸ்டீபன் ஹாக்கிங்: வானியல் துறை மாணவியின் அஞ்சலி

Report Print Balamanuvelan in கனடா

மருத்துவராகும் கனவில் வளர்ந்த தனது வாழ்வை ஸ்டீபன் ஹாக்கிங் மாற்றியதாகச் சொல்கிறார் Steffani Grondin(20) என்னும் மாணவி.

University of British Columbiaயில் மூன்றாமாண்டு astronomy and physics honours program பயிலும் மாணவியாகிய Grondin, பள்ளியின் astronomy clubஇன் தலைவராகவும் உதவி ஆசிரியையாகவும் இருக்கிறார்.

உலகில் பலரைப்போல தன்னையும் கோட்பாட்டு அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் மரணம் பாதித்துள்ளதாகக் கூறும் Steffani Grondin, தன் வாழ்வை அவர் எப்படி மாற்றினார் என்பதை விவரிக்கிறார்.

“Castlegar நகரில் பிறந்து மருத்துவராகும் கனவில் வாழ்ந்த நான் ஒரு நாள் தற்செயலாக லைப்ரரியில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன், அது Stephen Hawking எழுதிய A Brief History of Time என்னும் புத்தகம்”.

1988 ஆம் ஆண்டின் அதிக விற்பனையான புத்தகமாகிய அந்த புத்தகம், விண்வெளியைப்பற்றிய சிக்கலான விடயங்களை எளிய நடையில் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

“இந்த புத்தகம் பொழுது போவதற்கு உதவும், ஆனால் எனக்கு எதுவும் புரியப்போவதில்லை என்று நான் எண்ணினேன்” என்று கூறும் Steffani Grondin, ”அந்த புத்தகத்தைப் படித்து முடித்தபின் அதுதான் என் வாழ்க்கை என்று நான் முடிவு செய்து விட்டேன்” என்கிறார்.

“நாம் நினைப்பதை விட அதிக விடயங்கள் உள்ளன என்பதை அவர் எனக்கு புரிய வைத்து விட்டார்” என்கிறார் Steffani Grondin. விண்வெளியின் பிரம்மாண்டம் தன்னை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது என்று கூறும்

அவர், நாம் கண்ணால் காணாத இன்னும் எத்தனை விடயங்கள் உள்ளன, கண்டறியப்பட வேண்டிய விடயங்கள் எவ்வளவு உள்ளன என்பதைக் குறித்த ஒரு புதிய வெளிப்பாட்டை அவர் தனக்கு அளித்தாகக் கூறுகிறார்.

குறிப்பாக கருந்துளைகளையும், ஹாக்கிங் கதிரியக்கத்தையும் ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறும் Steffani Grondin, ஏற்கனவே ஹாக்கிங் நிறைய சாதித்து விட்டதாகவும் இளம் வானியல் இயற்பியலாளர்களாகிய தாங்கள் இன்னும் அதிகம் கற்க இடமளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். “யார் கண்டது, எங்களில் ஒருவர் அடுத்த Stephen Hawking ஆகலாம் இல்லையா?” என்கிறார் Steffani Grondin.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...