கனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் ஆபத்து: மக்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவில் சிக்கன் நக்கட்ஸ்களால் சால்மனல்லா பக்டீரியா பரவும் பாதிப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு கனடாவை சேர்ந்த New Brunswick, Newfoundland and Labrador, Nova Scotia, Ontario and Quebec ஆகியவற்றில் விற்கப்பட்ட Harvest Creek brand-களின் சிக்கன் நக்கட்ஸக்ளை திரும்ப பெறுமாறு கனடா உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பிரச்னைக்குரிய அந்த உணவின் பெயர் Harvest Creek's Uncooked Breaded Cutlet's எனவும் அதன் குறியீட்டு எண் BBMA 18-OC- 11 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட வகை உணவின் மூலம் மேற்கண்ட மாகாணங்களில் உள்ள நுகர்வோர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் அதன் பாதிப்புகள் பரவக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

சால்மனல்லா பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவு கெட்டுப் போனது போலத் தோற்றமளிக்காமல் இருக்கலாம், ஆனாலும் உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையாகும் என எச்சரிக்கிறது கனடா உணவுக் கட்டுப்பாட்டு வாரியம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்