பழிக்குப் பழி வாங்குவேன்: நீதிபதியை மிரட்டிய கனடா கொலைகாரன்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தனது தாய் மற்றும் இன்னொரு பெண்ணைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியிடம் நீதிபதி ஏதாவது கூற விரும்புகிறாயா என்று கேட்டதற்கு அவன் நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்து “ உங்களைப் பழிக்குப் பழி வாங்குவேன்” என்று கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவைச் சேர்ந்தவன் Emanuel Kahsai. தனது தாயையும் அவருடன் வசித்து வந்த சற்று மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணையும் கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டான்.

அவனுக்கு 50 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அவனிடம் வழக்கு தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறாயா என்று கேட்டபோதுதான் அவன் இவ்வாறு சத்தமிட்டான்.

இதற்குமுன் அவன் தனது சகோதரனையும் கொலை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டனையிலிருந்து தப்புவதற்காக மன நலம் பாதிக்கப்பட்டது போல நடித்த அவனை பரிசோதித்த மன நல நிபுணர்கள் அவன் நடிப்பதைக் கண்டு பிடித்தனர்.

அவனது நண்பர்கள், அவன் தாய் அவனை அவ்வளவு நேசித்தார் என்றும் அவனது தவறுக்கு சரியான தண்டவை கிடைத்துவிட்டது என்றும் அவனுக்கு தண்டனை கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் வெளிப்படையாகவே கூறினர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers