கனடா ஜூனியர் ஹாக்கி டீம் சென்ற பேருந்து பயங்கர விபத்து: பலர் பலியான பரிதாபம்

Report Print Balamanuvelan in கனடா
339Shares
339Shares
lankasrimarket.com

கனடாவின் Humboldt Broncos என்னும் ஜூனியர் ஹாக்கி டீம் சென்ற பேருந்து லொறியுடன் மோதிய விபத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

ஓட்டுநர் உட்பட 28 பேர் பயணம் செய்த பேருந்தில் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 14 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் விளையாட்டு வீரர்களா பயிற்சியாளர்களா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை சுமார் 5 மணியளவில் Saskatchewan பகுதியில் நேரிட்டது.

பேருந்தில் பயணம் செய்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் 16 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள கனடா பிரதமர் Justin Trudeau “இந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் எத்தகைய வேதனையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவருக்காகவும் என் மனம் வருந்துகிறது” என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்