அதிவேகத்தில் அஜாக்கிரதையாக வந்த டிரைவர்? கண்ணிமைக்கும் நேரத்தில் நொறுங்கிய பாலம்

Report Print Santhan in கனடா
505Shares
505Shares
lankasrimarket.com

கனடாவில் டிரைவரின் அஜாக்கிரதையதால் பாலம் ஒன்று இடிந்திருக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனடாவின் Montreal’s தேசிய நெடுஞ்சாலையில் டிரக்குடன் அதிவேகமாக வந்த லாரி ஒன்று பாலத்தை கடக்க முயன்ற போது, தூக்கிய நிலையில் இருந்த டிரக் பாலத்தில் முட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாலத்தின் குறித்த் பகுதி நொறுங்கி கீழே விழுந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து அரசு கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாத காரணத்தினால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லை எனில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

மேலும் அந்த டிரக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானாகவே மேலே வந்ததா என்பது தெரியவில்லை, அப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், இது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு எனவும், அதற்கான தண்டனை கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்