கனடாவில் நடந்த கோர விபத்து: அஞ்சலி நிகழ்வில் கனடா பிரதமர்

Report Print Fathima Fathima in கனடா

கனடாவில் ஐஸ் ஹொக்கி வீரர்களின் அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டுள்ளார்.

உள்ளூர் ஐஸ் ஹொக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஜீனியர் அணி வீரர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், விளையாட்டு துறையை பொறுத்தவரையில் கனடாவில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாஸ்கட்சேவான் மாகாணத்தின் சார்பில் நேற்று இரவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Elgar Petersen Arena-வில் நடந்த இந்நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐஸ் ஹொக்கி வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், இறந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

(JONATHAN HAYWARD/AFP/Getty Images)
(JONATHAN HAYWARD/AFP/Getty Images)

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்