கனடாவில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் காற்று: விலை என்ன?

Report Print Balamanuvelan in கனடா
256Shares
256Shares
lankasrimarket.com

கனடாவின் Edmonton பகுதியைச் சேர்ந்த இருவர் Albertaவின் Banff மற்றும் Lake Louise ஆகிய பகுதிகளிலிருந்து காற்றை பாட்டில்களில் அடைத்து விற்கத் தொடங்கியபோது அவர்கள் ஏதோ வேடிக்கைக்காகச் செய்வதாக மக்கள் நினைத்தனர்.

ஆனால் அது நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பனிப்பாறைகள் மற்றும் ஊற்றுக்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரை முக்கிய விற்பனைப் பொருளாக விற்கத் தொடங்கியுள்ளனர்.

Troy Paquette மற்றும் Moses Lam இருவரும், Banff பகுதிக்கு யாராவது செல்ல நேரிட்டால் அவர்கள் எவ்வாறு அந்த இடத்திலுள்ள காற்றின் தூய்மையை அனுபவிப்பார்கள் என்பது குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ மனதில் நெருடியது.

அந்த நேரத்தில் உலகமே காற்று மாசு குறித்து பேசிக்கொண்டிருக்க, இரண்டும் சேர்ந்து ஒரு மாபெரும் திட்டமாக உருவெடுத்தது. அப்படி உருவானதுதான் Vitality Air நிறுவனம்.

இவர்களது பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் காற்று மாசு நிறைந்த சீனாவைச் சேர்ந்தவர்கள். தற்போது காற்றுடன் இன்னொரு பொருளையும் விற்கத் தொடங்கியுள்ளார்கள். அது, பனிப்பாறை நீர்.

அத்துடன் Banff பகுதியிலுள்ள ஊற்றுக்களிலிருந்து தூய நீரும் விற்பனைக்கு வருகிறது. அதன் விலையும் 20 டொலர்கள்தான். மொத்தத்தில் காற்று மாசுவைக் காரணம் காட்டி Troy Paquette மற்றும் Moses Lamஇன் நிறுவனத்திற்கு நல்ல வருமானம் வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்