கனடாவில் தேர்தலில் போட்டியிடும் முதல் முக்காடிட்ட பெண்!

Report Print Mohana in கனடா
95Shares
95Shares
lankasrimarket.com

கனடா- 2018 கியுபெக் தேர்தலில் முதன் முதலாக முக்காடிட்ட பெண் போட்டியிடுகின்றார். இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலையுதிர் கால மாகாண தேர்தலிற்கு ஆறுமாதங்களே இருக்கும் நிலையில் கியுபெக்கில் முஸ்லீம் பெண்களின் ஆடை தெரிவு குறித்த விமர்சனம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த வாரம் மொன்றியல் மேயர் வலரி பிளான்ரே நகர பொலிஸ் அதிகாரிகள் தலைப்பாகை அல்லது ஹிஜாப் அணிதல் சீருடையின் ஒரு பகுதியாகும் என பரிந்துரைத்துள்ளார்.

ஏறக்குறைய அதே சமயத்தில் பர்தா அணியும் 44-வயதுடைய ஈவ் ரொறஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தாயார் கியுபெக் ஜனநாயக சோசலிச மற்றும் இறையாண்மை அரசியல் கட்சி சார்பில் மொன்றியல்-பகுதி ஒன்றில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார். இக்கட்சி சட்டமன்றத்தின் பெரும்பாலான இடது சாரி கட்சியாகும்.

கியுபெக் தேர்தலில் முக்காடிட்ட முதல் பெண் நிற்பது சூடான சில விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

அடிப்படை வாதத்துடன் வலுவானதொரு தொடர்புயை வார்த்தை “Islamist,” எனவும் ரொறஸ் ஒரு இஸ்லாமியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை ஒரு பெண்ணியவாதியாக தெரிவித்த இவர் சமூக நீதிக்காக போராட தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்