ரத்ததானம் செய்து கனடாவிற்கு தங்களது நன்றியை தெரிவித்த சிரிய மக்கள்

Report Print Kabilan in கனடா
134Shares
134Shares
lankasrimarket.com

கனடாவில் தஞ்சமடைந்த சிரிய மக்கள், ரத்ததானம் செய்து தங்களது நன்றியை கனடாவிற்கு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் ஒட்டாவாவைச் சேர்ந்த சமாதான மனிதர்கள் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘Syrian Canadian Donation Day' ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

இந்த ரத்ததான முகாமானது, Halifax முதல் Vancouver உள்ளிட்ட 10 நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சிரிய மக்கள், ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.

இதன் மூலம், தங்களுக்கு ஆதரவு அளித்த கனடாவிற்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிரிய அகதியான Mohammed Alsaleh கூறுகையில்,

‘ரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்கு சமமாகும். மற்றும் எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு இது நாங்கள் திருப்பி செய்யும் கைம்மாறு ஆகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக Calgary's Syrian Refugee Support Group-யின் இணை நிறுவனர் Sam Nammoura கூறுகையில், ‘உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் உறுதியளிக்கும்போது, அவர்கள் கூறுவது என்னவென்றால் என் ரத்தத்தை உங்களுக்காக தியாகம் செய்கிறேன் என்பதாகும்’ என தெரிவித்துள்ளார்.

Ashley Fraser/Postmedia

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்