அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட அனுமதிக்காத அரசாங்கம்: அதிருப்தியில் ஒண்டாரியோ மக்கள்

Report Print Trinity in கனடா
192Shares
192Shares
lankasrimarket.com

ஹம்போல்ட் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அனுமதிக்காத ஒண்டாரியோ நகரத்தின் மீது அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பஸ் விபத்தில் இறந்த பதினாறு பேர் நினைவாக அந்நாட்டின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடாத ஒண்டாரியோ மேயர் Shaun McLaughlin மீது அந்த நகரத்து மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

ஆகவே வெள்ளியன்று தாங்களே இந்த கொடி இறக்கும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள் கம்யூனிட்டி சென்டர் முன்பிருந்த கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர்.

இது பற்றிக் குறிப்பிடுகையில் மிஸ்ஸிஸிப்பி மில்ஸ் குடியிருப்பாளர் கெவின் மெக்கார்ட்னி தனது நகரத்தில் கொடிகள் குறைக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை என்கிறார்.

இது ஒட்டாவா மற்றும் பார்ரி, ஓன்டின் உள்ளிட்ட பிற நகராட்சிகளால் செய்யப்பட்ட ஒரு செயல் எனக் குறிப்பிடுகின்றனர் மக்கள்.

இது பற்றிய பேட்டியைத் தவிர்த்த மேயர் தனது வலைத்தளத்தில் இதன் விளக்கத்தை அளித்துள்ளார்.

சஸ்காட்ச்வான் விபத்து கொடூரமான சோகம் தான் எனும் மேயர் அதற்காக கனடா கொடியை தாழ்த்தி பறக்க விடுவது நகரக் கொள்கைகளில் இல்லை என்கிறார்.

மேலும் அந்தப் பெரிய விபத்திற்குப் பின் அதற்கு அடுத்த நாள் நடந்த மற்றொரு விபத்தில் 23 இந்தியக் குழந்தைகள் இறந்து இருக்கின்றனர். அதற்காகவும் கொடியை தாழ்த்திப் பறக்க விடலாமா என்று கேட்டிருக்கிறார் மேயர் Shaun McLaughlin.

உள்ளூர் நகரங்காளான கவுண்டி மற்றும் பிற நகரங்களிலும் கொடியைத் தாழ்த்திப் பறக்கவிடாத நிலையில் புகழ்பெற்ற புகார்தாரர் அவரது புகார்களில் இதனைக் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடரும் மேயர், இதைக் குற்றம் எனக் குறிப்பிடும் வலைப்பதிவு ஒரு வெற்றுப் புகார் குழு என்றும் அவர்கள் செய்வது அப்பட்டமான இனப்பாகுபாடு என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்