சொந்த மகளை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய பெற்றோர்: வழக்கு பதிந்த பொலிஸ்

Report Print Arbin Arbin in கனடா
319Shares
319Shares
ibctamil.com

கனடாவில் தங்கள் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய பெற்றோர் மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழனன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய சம்பவத்தை பேஸ்புக்கில் நேரலை செய்த சிறுமியின் தாயார், அசிங்கமாக திட்டிக்கொண்டே, என்னுடைய வீட்டில் புகுந்து எனது 13 வயது மகளுடன் உறவு வைத்துக் கொள்ள வந்திருக்கிறான்.

எனது மகளுடன் முதன் முறையாக உறவு கொள்ள வேண்டுமாம். நாங்கள் இவனை கட்டி வைத்துள்ளோம், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளோம் என அவர் பேசியுள்ளார்.

சிறுமியின் தாயாரின் முன்னாள் நண்பரின் சகோதரரே தாக்கப்பட்ட அந்த இளைஞர் என கூறப்படுகிறது. சிறுமி 3 வயதாக இருக்கும்போதே குறித்த இளைஞருக்கு அந்த குடும்பத்துடன் பழக்கம் இருந்துள்ளது.

சமீபத்தில் சிறுமிக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இளைஞர் அனுப்பிய ஆபாச குறிப்பு ஒன்று சிறுமியின் பெற்றோர் பார்வையில் சிக்கியுள்ளது.

இதனையடுத்தே குறித்த இளைஞர் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று சிறுமியுடன் உறவு கைத்துக் கொள்ள ரகசியமாக வீட்டுக்கு வந்த நிலையிலேயே மறைந்திருந்த பெற்றோரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறி குறித்த பெற்றோர் மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பொலிசாருக்கு ஏற்கெனவே புகார் அளித்தும் உரிய நேரத்தில் உதவிக்கு வரவில்லை என புகார் கூறும் சிறுமியின் பெற்றோர்,

பொலிசார் மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்