கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன்: நண்பரின் உருக்கமாக பதிவு

Report Print Murali Murali in கனடா
709Shares

கனடாவில் யாழ். இளைஞர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். கச்சேரியடியை சேர்ந்த 37 வயதான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர் என்பவர் இவரை கொலை செய்துள்ளார்.

37 வயதான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தார். இவர் எம்.வி சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு Scarboroughவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட கனகரட்ணம் கிருஷ்ணகுமாருடன், எம்.வி சன்சீ கப்பலில் பயணித்த சக நண்பரான டின்சன் வன்னியசிங்கம் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “கனகரட்ணம் கிருஷ்ணகுமாரின் மரணம் குறித்த செய்தி மிகவும் கொடூரமாக இருக்கின்றது.

இந்த செய்தியினை கேட்டு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் கனடாவிற்கு வந்திருந்தோம்.

மிகவும் சந்தோசமாக இருந்தோம். காரணம் நாங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்துள்ளோம். இருந்தும் ஏன் மீண்டும் இவ்வாறு நடக்க வேண்டும்.

தனது நண்பர் மிகவும் அப்பாவியானவர். நம்பிக்கையானவர். நன்கு பாடல்கள் பாடக்கூடியவர். எவ்வாறாயினும், டொரொன்டோ கிழக்கு பகுதியில் அவருக்கு அங்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

எம்.வி சன்சீ கப்பலில் இருந்த பலருடன் கனகரட்ணம் கிருஷ்ணகுமாருக்கு தொடர்பு இருந்த போதிலும், நகரத்திற்கு இடம்பெயர்ந்த பின்னர் அவர் வழக்கமான தொடர்பில் இருந்திருக்கவில்லை” என டின்சன் வன்னியசிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்