உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டிய மன்னர்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார்.

பனாமாவின் Bocas del Toro தீவில் அவர் இந்த பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் உயிரிகள் பாதிக்கப்படுவதைக் கண்ட ராபர்ட் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாக எறியப்படுவதைத் தவிர்க்க அவற்றைக் கொண்டு வீடுகள் கட்ட திட்டமிட்டார்.

மனிதர்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு குறைந்த செலவில் உறுதியான வீடுகளைக் கட்ட முடியும் என்பதை அவர் செய்து காட்டியுள்ளார்.

இதே முறையைப் பயன்படுத்தி ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தையே அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ராபர்ட் இந்த திட்டத்திற்காக பனாமாவில் சுற்றுச்சூழல் சிறப்பு விருது ஒன்றைப் பெறும் முதல் வேற்று நாட்டவராவார்.

40,000 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கட்டியுள்ள தனது நான்கடுக்கு மாளிகைக்கு சிறுவர்களை வரவேற்கும் ராபர்ட் இந்த தலைமுறை உலகுக்கு செய்துள்ள தீமையை சுட்டிக்காட்டி அவற்றை நல்ல வழியில் பயன்படுத்துவதற்காக ஒரு முன்மாதிரியாக இதைச் செய்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers