கனடாவில் சட்டவிரோதமாக நுழையும் நைஜீரிய குடியேறிகள்

Report Print Fathima Fathima in கனடா
153Shares
153Shares
ibctamil.com

கனடாவில் சமீபகாலமாக சட்டவிரோதமாக நுழையும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

சுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையும் நைஜீரியர்கள், அங்கு சில காலம் தங்கியவுடன் சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைகின்றனர்.

கனடா மட்டுமே அவர்களது குறிக்கோளாக உள்ள நிலையில், அமெரிக்கா சுற்றுலா விசாவை ஒரு கருவியாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

எனவே நைஜீரியாவில் உள்ள கனடா அதிகாரிகள், சுற்றுலா விசா வழங்குவது குறித்து கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து குடிவரவுத்துறை அமைச்சரின் தகவல் தொடர்பு பேச்சாளரான Hursh Jaswal, கனடாவில் தஞ்சமடைவதற்காக அமெரிக்கா விசாவை தவறாக பயன்படுத்தி வருகின்றனர், இதற்காக அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

போகோஹராம் போன்ற தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளால் பெரும்பாலான நைஜீரியர்கள் தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்